search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டிட தொழிலாளர்கள்"

    • மாநாட்டில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • சுமார் 35 கிளைகளிலிருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    தென்காசி :

    தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் தென்காசி மாவட்ட மாநாடு, கீழப்பாவூர் பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் நெல்லை மகாலிங்கம் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    மாநாட்டிற்கு தென்காசி மாவட்ட தலைவர் துரைப்பாண்டி, மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். அமைப்புசாரா தொழிலாளர் வாரிய பொருளாளர் தங்கமாரி முன்னிலை வகித்தார்.

    பூலாங்கும் கிளை தலைவர் வேல்சாமி வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல் தீர்மானங்களை வாசித்தார். மாநாட்டில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன், மாநில தொண்டர் படை அமைப்பாளர் செல்லப்பெருமாள், அமைப்பு சாரா சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன், தென்காசி மாவட்ட தலைவர் மகேந்திரன், செயலாளர் மிக்கேல் ஜஸ்டின், கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்ட பொருளாளர் மாணிக்கம், கடையம் ஒன்றிய தலைவர் தயானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அவர்களது தொழில் சார்ந்த கருவிகள் வாங்க அரசு மானிய அடிப்படையில் கடன் வழங்க வேண்டும். ஓய்வுதிய தொகை ரூ.1000-ல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் ரூ.500-லிருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்ளுதல் உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிளை தலைவர் சுப்பையா நன்றி கூறினார். மாநாட்டில் மாநில நிர்வாகிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுமார் 35 கிளைகளிலிருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு மாநில தலைவர் மகாலிங்கம் அடையாள அட்டைகளை வழங்கினார்.

    ×